சாத்தனூர் அணையில் 1.70 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு!
சாத்தனூர் அணையில் 1.70 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு!
ADDED : டிச 02, 2024 09:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
'பெஞ்சல்' புயல் காரணமாக கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாத்தனூர் அணைக்கு, வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 119 அடி, அதாவது 7,321 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில், 118.95 அடி, 7,309 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுகிறது.