sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சிலியில் பற்றி எரியும் காட்டுத்தீ: 18 பேர் பலி; வீடுகள் எரிந்து நாசம்!

/

சிலியில் பற்றி எரியும் காட்டுத்தீ: 18 பேர் பலி; வீடுகள் எரிந்து நாசம்!

சிலியில் பற்றி எரியும் காட்டுத்தீ: 18 பேர் பலி; வீடுகள் எரிந்து நாசம்!

சிலியில் பற்றி எரியும் காட்டுத்தீ: 18 பேர் பலி; வீடுகள் எரிந்து நாசம்!


ADDED : ஜன 19, 2026 08:54 AM

Google News

ADDED : ஜன 19, 2026 08:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாண்டியாகோ: சிலி நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீயால் 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையான நிலையில், 18 பேர் தீயில் கருகி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. தலைநகர் சாண்டியாகோவிற்கு தெற்கே சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள உபிள் மற்றும் பயோபியோ பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. குறிப்பாக, கடலோர நகரமான கான்செப்சியனை ஒட்டிய வறண்ட காடுகளில் தீ இடைவிடாமல் எரிந்து வருவதால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள் போராடி வந்தாலும் பலத்த காற்று காரணமாக தீயை அணைக்கும் பணியில் சிக்கல் நீடிக்கிறது. சிலி சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியான பேரழிவு தரும் தீ விபத்துகளைச் சந்தித்துள்ளது. காட்டுத்தீ பரவி வரும் இரண்டு பிராந்தியங்களில் சிலி அதிபர் கேப்ரியல் போரிக் பேரழிவு நிலையை அறிவித்துள்ளார்.

இதுவரை 20,000 ஹெக்டேர் நிலங்கள் தீயினால் பாதிக்கப்பட்டு உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சாண்டியாகோவிற்கு அருகிலுள்ள வால்பரைசோ பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 120 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us