sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூட்டணியில் சேர விடாமல் விஜயை தடுக்கும் 2 'ஆ'க்கள்

/

கூட்டணியில் சேர விடாமல் விஜயை தடுக்கும் 2 'ஆ'க்கள்

கூட்டணியில் சேர விடாமல் விஜயை தடுக்கும் 2 'ஆ'க்கள்

கூட்டணியில் சேர விடாமல் விஜயை தடுக்கும் 2 'ஆ'க்கள்

23


ADDED : மார் 17, 2026 05:37 AM

Google News

23

ADDED : மார் 17, 2026 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது சிறப்பு நிருபர் -

த.வெ.க.,வுடனான கூட்டணி குறித்து பா.ஜ.,வின் தொடர் முயற்சிக்கு பலன் கிடைக்கும் வகையில், சமீபத்தில் நடந்த த.வெ.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், 'தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணி வைக்கலாமா' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அவர்களில், 90 சதவீதம் பேர் கூட்டணி வைக்க ஆதரவு தெரிவித்ததுடன், விஜய் எடுக்கும் முடிவுக்கு சம்மதம் தெரிவிப்பதாகவும் கூறினர்.

அதன் தொடர்ச்சியாக, மாநில நிர்வாகிகளின் முடிவை விஜய் கேட்டுள்ளார். கூட்டணி விஷயத்தில் 'கிளைமேக்ஸ்' நெருங்கியுள்ள நிலையில், விஜயை கூட்டணியில் சேர விடாமல், அவரது அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியும், தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனாவும் தடுப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின.Image 1550032

பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி பேச்சு இல்லை


சமீப காலமாக, சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும், சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பா.ஜ., - அ.தி.மு.க., சசிகலா, ராமதாஸ் ஆகியோருடன், த.வெ.க.,வை தொடர்புபடுத்தி, கூட்டணி பேச்சு நடத்தப்படுவதாக கூறப்படும் தகவல்கள், முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன், எந்தவிதமான பேச்சும், எந்த மட்டத்திலும் நடக்கவில்லை.
இதே போன்ற உத்தியை, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புப்படுத்தி, கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டதும் உண்மை இல்லை. தொடர்ந்து குழப்பத்தை விளைவிக்க, ஆதாரமற்ற செய்திகளை தி.மு.க.,வினர் பரப்புகின்றனர்.
- நிர்மல்குமார், இணை பொதுச்செயலர், த.வெ.க.,








      Dinamalar
      Follow us