ADDED : டிச 19, 2024 04:36 AM

திருச்சி: திருச்சி கே.கே.நகர் அடுத்த ஓலையூர் ரிங்ரோடு பகுதியில் உள்ள உயரழுத்த மின்கோபுரத்தில், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களான, மணப்பாறை அருகே அருணாபட்டியைச் சேர்ந்த கலாமணி, 45, மணப்பாறை அருகே கல்லுப்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம், 32, ஆகியோர் நேற்று சரி செய்து கொண்டிருந்தனர்.
மின்கோபுரத்தில் கலாமணி ஏறி சரிபார்த்தபடி இருக்க, கீழே மின்கோபுரத்தை தொட்டவாறு மாணிக்கம் உதவி செய்து வந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக, மின்கோபுரத்தின் மேலே சென்ற உயரழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியது.
இதில் கோபுரத்தின் மேல் வேலை பார்த்துக் கொண்டிருந்த கலாமணி, தீப்பற்றிய நிலையில் மின்கம்பியில் அந்தரங்கத்தில் தொங்கியபடி உயிரிழந்தார்.
கீழே மின்கோபுரத்தை தொட்டுக் கொண்டிருந்த மாணிக்கத்தையும், மின்சாரம் தாக்கியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு இறந்தார்.
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் போனதும், வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாமல் போனதாலும் தான், இரு ஒப்பந்த ஊழியர்கள் இறந்து விட்டனர் என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

