sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

"2ஜி' வழக்கில் ஐவரின் ஜாமின் மனு : மீதான விசாரணை ஒத்திவைப்பு

/

"2ஜி' வழக்கில் ஐவரின் ஜாமின் மனு : மீதான விசாரணை ஒத்திவைப்பு

"2ஜி' வழக்கில் ஐவரின் ஜாமின் மனு : மீதான விசாரணை ஒத்திவைப்பு

"2ஜி' வழக்கில் ஐவரின் ஜாமின் மனு : மீதான விசாரணை ஒத்திவைப்பு


ADDED : அக் 04, 2011 01:17 AM

Google News

ADDED : அக் 04, 2011 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில், சந்தோலியா உள்ளிட்ட ஐந்து பேரின், ஜாமின் மனு மீதான விசாரணை, வரும் 17 மற்றும் 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கில், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜாவின் தனிச் செயலர் சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் புரமோட்டர் ஷாகித் பல்வா, குசேகான் வெஜிடபிள்ஸ் இயக்குனர்கள் ஆசிப் பால்வா, ராஜிவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் இயக்குனர் கரீம் மொரானி ஆகியோர், ஜாமின் கோரி, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள், நீதிபதி ஒ.பி.சைனி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, இன்னும் குற்றச்சாட்டு பதிவு செய்வது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. எனவே, குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தபின் தான், ஜாமின் மனு பற்றி விசாரிக்க முடியும்.

வரும் 15ம் தேதிக்குள், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டுள்ளதால், வரும் 17ம் தேதி, ஆசிப் பால்வா, ராஜிவ் அகர்வால், கரீம் மொரானி ஆகியோரின் ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். சந்தோலியா, ஷாகித் பல்வா ஆகியோரின் ஜாமின் மனுக்கள் குறித்து, 18ம் தேதி விசாரிக்கப்படும்' என, உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தி.மு.க., எம்.பி., கனிமொழி, கலைஞர் 'டிவி' நிர்வாகி சரத் குமார் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் மீதான விசாரணை, ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us