திருச்செந்துார் கடலில் கிடந்த 2 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
திருச்செந்துார் கடலில் கிடந்த 2 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
ADDED : டிச 03, 2024 03:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை பகுதியில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கமான நிகழ்வாக மாறி விட்டது.
சமீபத்தில் கடல் உள்வாங்கிய போது, 4 அடி உயரம் கொண்ட பெரிய கல்வெட்டு ஒன்றை அப்பகுதியில் நீராடிய பக்தர்கள் கண்டுபிடித்தனர். மற்றொரு பகுதியில், 4 அடி உயரம் கொண்ட தமிழ் எழுத்துக்கள் அடங்கிய கல் துாண் ஒன்றையும் பக்தர்கள் கண்டுபிடித்தனர். அந்த கல்வெட்டுகள் கடலில் நீண்ட நாட்களாக கிடந்ததால் அதில் உள்ள எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை.
அந்த கல்வெட்டுகளை, திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவரான பேராசிரியர் சுதாகர் மற்றும் பேராசிரியர் மதிவாணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். கடல் பாறை மேல் கிடந்த கல்வெட்டை படி எடுத்தனர்.