ADDED : அக் 09, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு, தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடலுார் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பாதிப்பு பரவி வருகிறது. வைரஸ் காய்ச்சலால் பெரும்பாலனோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தற்போது மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இரண்டு பேருக்கு கண்டறியப்பட்டு, அவர்கள் கடலுார் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.