sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

/

திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

14


UPDATED : மார் 13, 2026 02:53 PM

ADDED : மார் 13, 2026 01:34 PM

Google News

14

UPDATED : மார் 13, 2026 02:53 PM ADDED : மார் 13, 2026 01:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்


திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொமதேக இரண்டு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. திமுக கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. அந்த வகையில் இதுரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று (மார்ச் 13) திமுக கூட்டணியில் கொமதேக- திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொமதேக 2 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில், கொமதேக 3 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

பிரகாசமான வாய்ப்பு

நிருபர்கள் சந்திப்பில் ஈஸ்வரன் கூறியதாவது: புதிதாக கூட்டணிக்கு பல கட்சிகள் வந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக்கொள்ள சொன்னார்கள். கொமதேக சார்பில் 2 எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு செல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இபிஎஸ் மட்டும் தான் தனது ஆட்சி பொற்கால ஆட்சி என்று கூறி வருகிறார்.
இபிஎஸ் ஆட்சி நன்றாக இருந்தது என அன்புமணி, டிடிவி தினகரன் உட்பட யாரும் கூறவில்லை. பாஜ கூட்டணியில் உள்ள கட்சிகள் மனமுவந்து பணியாற்றவில்லை. இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.



தொகுதிகள் குறைப்பு நிலவரம்


கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ள தொகுதிகள், 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிகம், குறைப்பு பற்றிய விவரம்;

* காங்கிரஸ் -28 தொகுதி (3 அதிகம்)

* முஸ்லிம் லீக் -2 தொகுதி (1 குறைப்பு)

* ம.ம.க., -2 தொகுதி (அதே நிலை)

* ம.தி.மு.க., -4 தொகுதி (2 குறைப்பு)

* கொமதேக - 2 தொகுதி (1 குறைப்பு)






      Dinamalar
      Follow us