போலீஸ் சீருடையில் பா.ஜ.,வில் இணைந்த 2 எஸ்.ஐ.,க்கள் சஸ்பெண்ட்
போலீஸ் சீருடையில் பா.ஜ.,வில் இணைந்த 2 எஸ்.ஐ.,க்கள் சஸ்பெண்ட்
ADDED : ஜன 03, 2024 02:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பா.ஜ.,வில் இணைந்த சிறப்பு எஸ்.ஐ.,க்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நாகை மாவட்டத்தில் நடைபயணத்தின் போது போலீஸ் சீருடை அணிந்து 2 சிறப்பு எஸ்.ஐ.,க்கள் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.
இந்நிலையில் எஸ்.ஐ.,க்கள் கார்த்திகேயன், ராஜேந்திரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். இருவரும் நாகை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். இருவரும் போலீஸ் சீருடையில் பா.ஜ.,வில் இணைந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.