8 மாவட்டங்களில் 20 ஊராட்சிகள் புதிதாக உருவாக்கம்
8 மாவட்டங்களில் 20 ஊராட்சிகள் புதிதாக உருவாக்கம்
ADDED : டிச 12, 2025 05:11 AM

சென்னை: தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில், 17 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு, 20 கிராம ஊராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ள அரசாணை:
தமிழகத்தில் ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகளின் எல்லைகள், மறு வரையறை பணிகள் நடந்து வருகின்றன. இதன் அடிப்படையில், புதிய கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்படுகின்றன.
செ ங்கல்பட்டு, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், சிவகங்கை, திருச்சி ஆகிய எட்டு மாவட்டங்களில், 17 கிராம ஊராட்சிகளின் எல்லைகள், மறுவரையறை செய்யப்பட்டுள்ளன.
அவை, 37 ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. புதிதாக, கோவையில் 6; கள்ளக்குறிச்சி 4; திருச்சி 4; திண்டுக்கல் 2; செங்கல்பட்டு, தர்மபுரி, கரூர், சிவகங்கை மாவட்டங் களில் தலா ஒன்று என, மொத்தம் 20 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய கிராம ஊராட்சிகள் குறித்த அறிவிப்பை, மாவட்ட அரசிதழில் வெளியிட, கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், தேர்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளுக்கான பதவிகாலம் முடிந்த பின், அரசாணை அமல்படுத்தப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

