sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'கன்ட்ரோல் ரூம்' போட்டதால் தலைவலி; தமிழக பதிவுத்துறையில் தினமும் குவியுது 200 புகார்

/

'கன்ட்ரோல் ரூம்' போட்டதால் தலைவலி; தமிழக பதிவுத்துறையில் தினமும் குவியுது 200 புகார்

'கன்ட்ரோல் ரூம்' போட்டதால் தலைவலி; தமிழக பதிவுத்துறையில் தினமும் குவியுது 200 புகார்

'கன்ட்ரோல் ரூம்' போட்டதால் தலைவலி; தமிழக பதிவுத்துறையில் தினமும் குவியுது 200 புகார்

6


ADDED : நவ 11, 2025 04:44 AM

Google News

6

ADDED : நவ 11, 2025 04:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பதிவுத்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தினமும், 200 புகார்கள் வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுதும், 587 சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. தாமதமின்றி பத்திரங்களை பதிவு செய்து கொடுக்க வேண்டும் என, சார் - பதிவாளர்களுக்கு பதிவுத் துறை தலைமை அறிவுறுத்தி உள்ளது.

மேலும், சார் - பதிவாளர் அலுவலக செயல்பாடுகள் நேரலை வாயிலாக கண்காணிக்கப்படுகின்றன.

இருப்பினும், பெரும்பாலான சார் - பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவுக்காக நேரடியாக வரும் பொது மக்கள், அங்குள்ள அலுவலர்கள், பணியாளர்களால் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஆவண எழுத்தர் வாயிலாக வந்தால் மட்டுமே பணிகள் நடக்கும் சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், சார் - பதிவாளர் அலுவலகங்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து புகார் அளிக்க, பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டது.

மொபைல் போன் மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கட்டுப்பாட்டு அறைக்கு தினமும், 200 புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இதில் தொழில்நுட்ப பிரச்னை தொடர்பான புகார்கள், அதற்கான பிரிவு வாயிலாக உடனுக்குடன் சரிசெய்யப்படுகின்றன.

அதேநேரம், சார் - பதிவாளர்களின் செயல்பாடு தொடர்பான புகார்கள், மேலதிகாரிகள் விசாரணைக்கு அனுப்பப்படுகி ன்றன.

இந்த புகார்கள் தொடர்பாகவும், பொது மக்களிடம் ஏற்படும் அதிருப்தி குறித்தும், டி.ஐ.ஜி., மாவட்ட பதிவாளர் வாயிலாக விசாரித்து, சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us