உள்ளடக்கத்திற்கு செல்ல

'டாஸ்மாக்' நிறுவனத்தில் 200 பேருக்கு பதவி உயர்வு
'டாஸ்மாக்' நிறுவனத்தில் 200 பேருக்கு பதவி உயர்வு
ADDED : ஜூன் 10, 2026 05:10 AM

அ நிறம் | அளவு
சென்னை: மது கடைகளில் பணிபுரிந்தவர்களில், இளநிலை உதவியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட 200 பேருக்கு, உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்கிறது. கடந்த, 2017ல் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியிருந்த, பல மதுக்கடைகள் மூடப்பட்டன.
அந்த கடைகளில் பணிபுரிந்தவர்களில், 500 பேர் எழுத்து தேர்வு வாயிலாக, டாஸ்மாக் அலுவலகங்களுக்கு இள நிலை உதவியாளர்களாக, 2018ல் தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போது, காலியிடங்களுக்கு ஏற்ப, அவர்களில் 200 பேருக்கு, உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கி, 'டாஸ்மாக்' உத்தரவிட்டு உள்ளது.
