ADDED : அக் 24, 2025 12:32 AM
சென்னை: சூரசம்ஹாரம் திருவிழாவையொட்டி, சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து, திருச்செந்துாருக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
திருச்செந்துாரில் வரும் 27ம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்வு நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, திருச்செந்துாருக்கு அதிகளவில் மக்கள் பயணிப்பர்.
இதையொட்டி, நாளை மறுதினம் முதல், சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும், திருச்செந்துாருக்கு தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து, திருச்செந்துாருக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இது தவிர, மற்ற அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பயணியர் www.tns tc.in மற்றும் அதன் செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

