எஸ்.ஆர்.எம்., பல்கலையில் 20ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
எஸ்.ஆர்.எம்., பல்கலையில் 20ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
ADDED : அக் 14, 2024 04:17 AM

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், -காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை கழகத்தின், 20ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்கலை கழக வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு, எஸ்.ஆர்.எம்., பல்கலை கழக நிறுவனர் பாரிவேந்தர் தலைமை தாங்கினார். துணைவேந்தர் முத்தமிழ்ச்செல்வன் வரவேற்புரை ஆற்றி, ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தார்.
சிறப்பு விருந்தினராக, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் சீத்தாராம் பங்கேற்று, தேர்வில் சிறப்பிடம் பிடித்த, 147 பேருக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் மொத்தம், 8,438 மாணவ - மாணவியர் பட்டம் பெற்றனர்.
தேர்வு கட்டுப்பாட்டாளர் குணசேகரன், பதிவாளர் பொன்னுச்சாமி, ராமாபுரம் மற்றும் திருச்சி எஸ்.ஆர்.எம்., வளாக இணை தலைவர் நிரஞ்சன், இணைவேந்தர் சத்யநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.