இப்போதைக்கு இதுதான் நிலவரம்; 21 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் இல்லை! முழு லிஸ்ட் இதோ
இப்போதைக்கு இதுதான் நிலவரம்; 21 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் இல்லை! முழு லிஸ்ட் இதோ
ADDED : அக் 15, 2024 11:27 AM

சென்னை: 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தவாறே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. தலைநகர் சென்னையில் இடைவிடாது மழை பெய்து வருகின்றது. மழை ஒரு பக்கம் பெய்து தள்ள, மறுபுறம் வாகன ஓட்டிகள் சாலைகளில் வலம் வந்து கொண்டே இருக்கின்றனர்.
நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மண்டலம் வாரியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந் நிலையில் சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
அந்த சுரங்கப்பாதைகள் விவரம் வருமாறு;
*கத்திவாக்கம்
*மாணிக்கம் நகர்
*வியாசர்பாடி
*கணேசபுரம்
*எம்.சி. ரோடு(ஸ்டான்லி மருத்துவமனை)
*ஸ்டான்லி நகர்
*ரிசர்வ் வங்கி
*கெங்குரெட்டி
*பெரம்பூர் ஹைரோடு
*வில்லிவாக்கம்
*ஹாரிங்டன்
*நுங்கம்பாக்கம்
*ஜோன்ஸ் ரோடு
*துரைசாமி சுரங்கப்பாதை
*மேட்லி
*ரங்கராஜபுரம்
*பஜார் ரோடு
*மவுண்ட்
*தில்லை கங்கா நகர்
*பழவந்தாங்கல்
*அரங்கநாதன்
இந்த சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காததால் வாகன ஓட்டிகள் இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.