உள்ளடக்கத்திற்கு செல்ல
துாத்துக்குடி மின் நிலையம் 210 மெகா வாட் பாதிப்பு
துாத்துக்குடி மின் நிலையம் 210 மெகா வாட் பாதிப்பு
ADDED : ஆக 20, 2026 11:08 PM
அ நிறம் | அளவு
சென்னை: துாத்துக்குடி மாவட்டத்தில், மின் வாரியத்திற்கு, துாத்துக்குடி அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில், நான்கு அலகுகளில், மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த மின்சாரம், தென் மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், துாத்துக்குடி மின் நிலையத்தின் மூன்றாவது அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று நள்ளிரவு முதல், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
