உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 03, 2026 01:12 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகம் முழுதும், சட்டம், ஒழுங்கு பராமரிப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆக.,12ம் தேதியில் இருந்து, செப்.,1ம் தேதி வரை நடத்தப்பட்ட தீவிர சோதனையில், சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்த, 2,159 பேரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், பல்வேறு வழக்குகளில் கைதாகி, ஜாமினில் வெளிவந்து விசாரணைக்கு ஆஜராகாததால், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட, 4,705 பேர் மீண்டும் கைது செய்யப் பட்டுள்ளனர்.
