ADDED : அக் 15, 2024 10:50 PM
சென்னை:''வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, புதுச்சேரி, நெல்லுார் இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும்,'' என, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கு, தென் கிழக்கே, 490 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை அதிகாலையில், புதுச்சேரி - நெல்லுார் இடையே, தமிழகத்தின் வட பகுதி, தெற்கு ஆந்திர பகுதியில் கரையை கடக்கும்.
நேற்று காலை முதல், தமிழகம் முழுதும் 42 இடங்களில் கன மழை பெய்துள்ளது. சென்னையில், நேற்றிரவு 8:00 மணி நிலவரப்படி, 14 மணி நேரத்தில், அதிகபட்சமாக, மணலி புது நகரில், 23 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.