'15 நாட்களில் 245 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள்'
'15 நாட்களில் 245 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள்'
ADDED : பிப் 23, 2024 02:16 AM
சென்னை: சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - கிருஷ்ணசாமி: திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம், அணைக்கட்குச்சேரி கிராமத்தில் உள்ள ஜெ.ஜெ., நகர் பகுதியில், புதிய கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: புதிதாக 245 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் 15 நாட்களுக்குள் வர உள்ளன. எங்கெங்கு தேவையோ அந்த இடங்களுக்கு, நடமாடும் கால்நடை மருத்துவமனை வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும்.
கிருஷ்ணசாமி: திருவள்ளூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள, ஆந்திர மாநிலம் நெல்லுார் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. தமிழகத்தில் பரவாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: பறவை காய்ச்சல் குறித்த தகவல் வெளியானதும், கால்நடைத்துறை சார்பில், அங்கிருந்து வரும் வாகனங்கள் மீது மருந்து தெளிக்கப்படுகிறது. எந்த வண்டி வந்தாலும், எந்தப் பறவைகள் வந்தாலும், கோழிகள் வந்தாலும் உள்ளே வரக்கூடாது. நோய் பரவாமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.