sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கனமழை கொட்டப்போகுது; சென்னை மக்களே உஷார்!

/

கனமழை கொட்டப்போகுது; சென்னை மக்களே உஷார்!

கனமழை கொட்டப்போகுது; சென்னை மக்களே உஷார்!

கனமழை கொட்டப்போகுது; சென்னை மக்களே உஷார்!

9


ADDED : அக் 14, 2024 08:03 AM

Google News

ADDED : அக் 14, 2024 08:03 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இன்று முதல் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நேற்று மாலை முதலே மழை கொட்டித் தீர்த்தது. நள்ளிரவிலும் கனமழை நீடித்தது. இதனால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கின. இதன் காரணமாக, பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன. மேலும், நீர்நிலைகளில் நீரின் அளவும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

இதனிடையே, வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக, சென்னை மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது.

இது மேற்கு - வடமேற்கு திசையில், நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வடதமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை, அதற்கடுத்த 48 மணிநேரத்தில் நகரக் கூடும்.

இதன் காரணமாக, தென்மேற்கு பருவமழை விலகி, நாளை வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் தொடங்கக் கூடும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இன்று காலை 10 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும்.

தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. எனினும் பொதுமக்கள் தங்களால் முடிந்த அளவுக்கு முன்னெச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் பதிவான மழை விபரம்

சென்னை மாவட்டம்


ஐஸ் ஹவுஸ் - 50.7 மி.மீ.,

உத்தண்டி - 46.2 மி.மீ.,

அடையார் ஈகோ பார்க் - 41.7 மி.மீ.,

அடையார் - 34.5 மி.மீ.,

ஆலந்தூர் - 33.3 மி.மீ.,

தேனாம்பேட்டை - 31.5 மி.மீ.,

கோடம்பாக்கம் - 31.5 மி.மீ.,

பெருங்குடி - 30.6 மி.மீ.,

முகலிவாக்கம் - 30 மி.மீ.,

சோழிங்கநல்லூர் - 23.6 மி.மீ.,

வளசரவாக்கம் - 23.4 மி.மீ.,

மதுரவாயல் - 23.1 மி.மீ.,

அண்ணாநகர் - 20.7 மி.மீ.,

ஈரோடு மாவட்டம்


வரட்டு பள்ளம் - 36.2 மி.மீ.,

சத்தியமங்கலம் - 32 மி.மீ.,

மொடக்குறிச்சி - 27.2 மி.மீ.,

அம்மாபேட்டை - 14 மி.மீ.,

கவுந்தப்பாடி - 13.4 மி.மீ.,

பெருந்துறை - 13 மி.மீ.,

சென்னிமலை - 12 மி.மீ.,

நம்பியூர் - 8 மி.மீ.,

தாளவாடி - 24 மி.மீ.,

பெருந்துறை - 13 மி.மீ.,

பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 5,269 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 87.34 அடி, நீர் இருப்பு 19.90 டி.எம்.சி.,யாக உள்ளது.

நாமக்கல் மாவட்டம்


மோகனூர் - 15 மி.மீ.,

மங்களபுரம் - 12.6 மி.மீ.,

பரமத்திவேலூர் - 11 மி.மீ.,

நாமக்கல் - 8.5 மி.மீ.,

பெரம்பலூர் மாவட்டம்




பாடலூர் - 15 மி.மீ.,

சேலம் மாவட்டம்




சேலம் - 43.6 மி.மீ.,

ஏற்காடு - 19.2 மி.மீ.,

மேட்டூர் - 13.2 மி.மீ.,

கெங்கவல்லி - 12 மி.மீ.,

திருவாரூர் மாவட்டம்




திருவாரூர் - 32 மி.மீ.,

நீலகிரி மாவட்டம்




கீழ் கோத்தகிரி எஸ்டேட் - 33 மி.மீ.,

கிளன்மார்கன் - 25 மி.மீ.,

அப்பர் பவானி - 22 மி.மீ.,

அடார் எஸ்டேட் - 20 மி.மீ.,

கிண்ணக்கொரை - 17 மி.மீ.,

குந்தா பாலம் - 16 மி.மீ.,

பந்தலூர் - 16 மி.மீ.,

குன்னூர் - 11 மி.மீ.,

கோவை மாவட்டம்




வேளாண் பல்கலை - 60 மி.மீ.,

கோவை தெற்கு தாலுகா ஆபிஸ் - 78 மி.மீ.,

சூலூர் - 38 மி.மீ.,

சிறுவாணி அடிவாரம் - 12 மி.மீ.,

பொள்ளாச்சி தாலுகா ஆபிஸ் - 52 மி.மீ.,

மாக்கினாம்பட்டி - 64 மி.மீ.,

கிணத்துக்கடவு - 23 மி.மீ.,

சின்னக் கல்லார் - 23 மி.மீ.,

வால்பாறை பிஏபி - 53 மி.மீ.,

வால்பாறை தாலுகா ஆபிஸ் - 51மி.மீ.,

பீளமேடு - 58.5 மி.மீ.,

அன்னூர் -12.40 மி.மீ.,

வாரப்பட்டி -27 மி.மீ.,

தொண்டாமுத்தூர் -18 மி.மீ.,

மயிலாடுதுறை மாவட்டம்




சீர்காழி - 15.8 மி.மீ.,

கொள்ளிடம் - 2 மி.மீ.,

திண்டுக்கல் மாவட்டம்


திண்டுக்கல் 23.2 மி.மீ.,

கொடைக்கானல் போட் கிளப் - 18.7 மி.மீ.,

கொடைக்கானல் - 11 மி.மீ.,

கிருஷ்ணகிரி மாவட்டம்


ஜம்பு குட்டப்பட்டி - 30 மி.மீ.,

பேனுகொண்டாபுரம் - 27.2 மி.மீ.,

ராயக்கோட்டை - 17 மி.மீ.,

புதுக்கோட்டை மாவட்டம்




காரையூர் - 55.4 மி.மீ.,

குடுமியான்மலை - 41.4 மி.மீ.,

ஆவுடையார் கோயில் - 40.8 மி.மீ.,

அன்னவாசல் - 31 மி.மீ.,

ராணிப்பேட்டை மாவட்டம்




மின்னல் - 22.6 மி.மீ.,

ஆற்காடு - 19.4 மி.மீ.,

வாலாஜா - 16.8 மி.மீ.,

சிவகங்கை மாவட்டம்




தேவகோட்டை - 28.4 மி.மீ.,

சிவகங்கை TB - 25.8 மி.மீ.,

காரைக்குடி - 13 மி.மீ.,

சிவகங்கை - 12 மி.மீ.,

தென்காசி மாவட்டம்




சங்கரன்கோவில் - 44 மி.மீ.,

கருப்பா நதி அணை -10 மி.மீ.,

திருச்சி மாவட்டம்




கல்லக்குடி - 25.4 மி.மீ.,

திருச்சி டவுன் - 20 மி.மீ.,

திருச்சி ஜங்ஷன் - 19 மி.மீ.,

பொன்மலை - 17. 8மி.மீ.,

திருப்பூர் மாவட்டம்




மூலனூர் - 49 மி.மீ.,

உடுமலை - 35 மி.மீ.,

நல்லதங்காள் ஓடை - 30 மி.மீ.,

அமராவதி அணை - 30 மி.மீ.,

தாராபுரம் - 24 மி.மீ.,

வட்டமலைக் கரை ஓடை - 22 மி.மீ.,

குண்டடம் - 14 மி.மீ.,

விழுப்புரம் மாவட்டம்




விழுப்புரம் - 25 மி.மீ.,

வளவனூர் -12 மி.மீ.,

விருதுநகர் மாவட்டம்




சாத்தூர் - 67 மி.மீ.,

பெரியார் அணை - 43 மி.மீ.,

வேம்பக்கோட்டையனை - 26 மி.மீ.,

மதுரை மாவட்டம்


ஆண்டிப்பட்டி தாலுகா ஆபிஸ் 75.2

வாடிப்பட்டி 62

சோழவந்தான் 50

கள்ளந்திரி 24

பெரியப்பட்டி 20.6






      Dinamalar
      Follow us