தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஐ.பி.எஸ்., அந்தஸ்து!
தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஐ.பி.எஸ்., அந்தஸ்து!
UPDATED : ஜன 22, 2025 08:24 AM
ADDED : ஜன 22, 2025 08:18 AM

சென்னை: தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஐ.பி.எஸ்., அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
காவல் துறைக்கு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, குரூப் -1 தேர்வு நடத்தி, டி.எஸ்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். டி.எஸ்.பி.க்களாக பணியில் சேருபவர்களுக்கு பதவி, மூப்பு அடிப்படையில் எஸ்.பி.க்களாக பணியாற்றும் போது அவர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளில் ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கப்படும்.
யு.பி.எஸ்.சி. மூலம் தேர்வாகி ஐ.பி.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறவர்களைப் போல, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அதிகாரிகளுக்கும் ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய ஐ.பி.எஸ்., அந்தஸ்து தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், 'மணி, செல்வக்குமார், டாக்டர் சுதாகர், எஸ்.ஆர்.செந்தில்குமார், முத்தரசி, பெரோஸ்கான் அப்துல்லா, சக்திவேல், நாகஜோதி,
ராஜராஜன், விமலா, சுரேஷ்குமார், பாஸ்கரன், சண்முக பிரியா, ஜெயக்குமார், மயில்வாகனன், ஜெயலட்சுமி,
சுந்தர வடிவேல், உமையாள், எஸ்.சரவணன், டி.செந்தில்குமார், மகேந்திரன், சுப்புலட்சுமி, ராஜன், செல்வராஜ், ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், 'மாநிலக் காவல்துறையில் சிறப்பாகப் பணிபுரிந்தமைக்கான அங்கீகாரமாக இந்தியக் காவல் பணி (I.P.S.) அதிகாரிகளாக உயர்வு பெற்றுள்ள 25 பேருக்கும் எனது பாராட்டுகள்! தங்கள் பணி சிறக்கட்டும்!' என குறிப்பிட்டுள்ளார்.