UPDATED : நவ 13, 2026 08:43 PM
ADDED : நவ 13, 2026 08:40 PM
துாத்துக்குடி: இந்தோனேஷியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 25 டன் கொட்டை பாக்கு மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வெளிநாடுகளில் இருந்து கொட்டை பாக்கு இறக்குமதி செய்ய மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனால், போலி ஆவணங்கள் மூலம் கப்பல்களில் கொட்டை பாக்கு கடத்தி வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தோனேஷியாவில் இருந்து துாத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த ஒரு கப்பலில், சுமார் 25 டன் கொட்டை பாக்கு மூட்டைகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த மூட்டைகளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒருவரை தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
