தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சென்னை உட்பட 6 நகரங்களில் 2,545 ‘சிசிடிவி’

சென்னை உட்பட 6 நகரங்களில் 2,545 ‘சிசிடிவி’

சென்னை உட்பட 6 நகரங்களில் 2,545 ‘சிசிடிவி’


UPDATED : நவ 13, 2026 08:36 PM

ADDED : நவ 13, 2026 08:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 08:36 PM ADDED : நவ 13, 2026 08:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவு சார்பில், சென்னை, ஆவடி, தாம்பரம், மதுரை, திருச்சி, கோவை என, ஆறு நகரங்களில், 2,545 ‘சிசிடிவி’ எனப்படும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பதிவாகும் காட்சிகள், 30 நாட்கள் சேமிக்கப்படும்.

இந்த ‘சிசிடிவி’யில் சந்தேக நபர்களின் நடமாட்டம், ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்பவர்கள், சாலைகளில் வீசப்பட்ட மர்ம பொருட்கள், தகராறில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் வகையில், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட உள்ளது.

பொது மக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், இந்த ‘சிசிடிவி’ பொருத்தப்பட உள்ளன. மேலும், தானியங்கி முறையில் வாகன பதிவு எண்களை படம் பிடிக்கும் வசதியும், குற்ற வழக்குகளில் சிக்கிய நபர்களை அடையாளம் காண, முக அடையாள தொழில்நுட்ப வசதியும் இடம்பெற உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us