'மியாட்'டின் 25வது ஆண்டு விழா சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு
'மியாட்'டின் 25வது ஆண்டு விழா சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு
ADDED : பிப் 18, 2024 06:57 AM

சென்னை : சென்னை மியாட் மருத்துவமனையின், 25வது ஆண்டு விழாவையொட்டி, மியாட் மருத்துவமனை சிறப்பு அஞ்சல் தலையை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
சென்னை மியாட் மருத்துவமனையின், 25வது ஆண்டு நிறுவனர் தின விழா, நேற்று மாலை சென்னையில் நடந்தது. அதன் நிறுவனர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் வரவேற்றார். நிறுவனர் மோகன்தாஸ் கடந்து வந்த பாதை மற்றும் மருத்துவமனையின், 25 ஆண்டு சேவை குறித்து, காணொலி வாயிலாக விளக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழக முதல்வர் ஸ்டாலின், 'மியாட் மருத்துவமனை' சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டார். தொடர்ந்து, சிறப்பாக பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, நிறுவனர் மோகன்தாஸ் விருது வழங்கி கவுரவித்தார்.
நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் கூறியதாவது:
மியாட் மருத்துவமனை, 1999ம் ஆண்டு, 70 படுக்கை வசதியுடன் துவங்கியது. தற்போது, 63 சிறப்பு பிரிவுகளுடன், 1,000 படுக்கை வசதியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக, 'டிபியா நெயில் அட்வான்ஸ்டு' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, எலும்பு முறிவு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறந்த மருத்துவ சேவையால், 130 நாடுகளில் இருந்து பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.