28 லட்சம் மின் இணைப்புகளில் கணக்கெடுக்க மீட்டர்கள் இல்லை
28 லட்சம் மின் இணைப்புகளில் கணக்கெடுக்க மீட்டர்கள் இல்லை
UPDATED : செப் 18, 2024 11:40 PM
ADDED : செப் 18, 2024 11:34 PM

சென்னை: தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட 3.32 கோடி மின் இணைப்புகளில், 3.04 கோடி இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளன. 28 லட்சம் இணைப்புகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, மீட்டர்கள் இல்லை.
மேலும், 23.43 லட்சம் விவசாய இணைப்புகளில், 4.26 லட்சத்துக்கு மட்டுமே மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 31 நிலவரப்படி, மாநிலம் வாரியாக உள்ள மின் இணைப்புகள், அவற்றில் மீட்டர் பொருத்தப்பட்டவற்றின் எண்ணிக்கை விபரங்களை, மத்திய மின்துறை வெளியிட்டுள்ளது.
![]() |
வீடுகளில், 96.38 சதவீத இணைப்புகளிலும், விவசாயப் பிரிவில், 18.20 சதவீத இணைப்புகளிலும் மீட்டர்கள் உள்ளன.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒவ்வொரு இணைப்பிலும் மின் பயன்பாடு விபரம் தெரிந்தால்தான், கட்டணம் வசூலாகிறதா என்பது தெரியவரும். 'ஓவர்லோடு' ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து, சரிசெய்ய முடியும்.
இலவச மின்சாரம் வழங்கப்படும் விவசாயப் பிரிவிலும், மீட்டர் பொருத்தப்படுகிறது; மீட்டர் பொருத்தினாலும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.