ADDED : ஜன 26, 2024 06:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., அறிக்கை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செல்வராஜ் மீது, பெண்களை தொந்தரவு செய்வது உட்பட பல்வேறு பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்துஉள்ளனர்.
நடுநிலையோடு செயல்பட வேண்டிய காவல் துறை, தி.மு.க.,வினர் பேச்சை கேட்டு, பொய் வழக்குகள் போட்டு எதிர்க்கட்சி நிர்வாகிகளை முடக்கி விடலாம் என்ற இருமாப்பில் செயல்படுவது அழகல்ல.
சட்டப்படி இன்னும், 28 அமாவாசைகள் மட்டுமே, தி.மு.க., அரசு இருக்கும் என்பதை உணர்ந்து, காவல்துறையினர் நேர்மையாக பணிபுரிய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

