தமிழகத்தில் நடப்பாண்டில் மே வரை 28,675 விபத்துகள்; 7,128 பேர் பலி
தமிழகத்தில் நடப்பாண்டில் மே வரை 28,675 விபத்துகள்; 7,128 பேர் பலி
ADDED : ஜூலை 26, 2025 06:32 PM
சிவகங்கை:'தமிழகத்தில் இந்தாண்டு வரை நடந்த, 28,675 சாலை விபத்துகளில், 7,128 பேர் பலியாகி உள்ளனர். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் விபத்து மற்றும் உயிரிழப்பு, 12.7 சதவீதம் வரை குறைந்துள்ளது' என, அரசு போக்கு வரத்து கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக, மாநில அளவில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் அதிக விபத்துகள் நடக்கும் முக்கிய சாலைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
அப்பகுதிகளில் சாலை விதிகள் சார்ந்த விழிப் புணர்வு வாசகங்கள், போர்டு கள், இரவில் மிளிரும் வேகத்தடைகள் அமைத்து வருகின்றனர். தமிழக அளவில் சாலை விபத்துகள் குறித்த ஆய்வும் நடத்தப்பட்டது.
அதில், 2024 ஜன., முதல் மே வரை மாநில அளவில், தேசிய, மாநில, மாவட்ட சாலைகளில் நடந்த, 28,454 சாலை விபத்துகளில் 8,106 பேர் பலியாகினர்.
அதே நேரம், 2025 ஜன., முதல் மே வரை நடத்திய ஆய்வில், 28,675 விபத்துக்களில், 7,128 பலியாகினர். 2024ஐ விட, 2025ல் சாலை விபத்துகள் அதிக ரித்திருந்தாலும், உயிரிழப்பு கள் குறைந்துள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ம் ஆண்டில் சாலை விபத்து, 0.78 அதிகரித்தாலும், பலி எண்ணிக்கை 12.07 சதவீதம் குறைந்துள்ளது போக்குவரத்து கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் மிக அதிகம் மற்றும் அதிக விபத்து நடக்கும் ரோடுகளை அடையாளம் கண்டு, அங்கு தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு ஆலோசனை வழங்கியுள்ளது' என்றார்.