ADDED : நவ 13, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை ; சென்னை, மும்பையில், ஓ.பி.ஜி., பவர் அண்டு இன்ப்ராஸ்ட்ரக்சர் மற்றும் பி.விண்ட் எனர்ஜி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்கள் சார்பில், சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் அனல் மின்சாரமும், மற்ற இடங்களில் சூரியசக்தி மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிறுவனங்கள் சட்ட விரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்து இருப்பதாக கூறப்பட்ட புகாரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிந்து, சென்னை, மும்பை மற்றும் ஆந்திரா உட்பட, 15 இடங்களில், நேற்று 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டனர்.

