இந்தியாவிலேயே 2வது இடம் ஈரோடுக்கு: வெயிலோடு மல்லுக்கட்டும் மக்கள்
இந்தியாவிலேயே 2வது இடம் ஈரோடுக்கு: வெயிலோடு மல்லுக்கட்டும் மக்கள்
UPDATED : ஏப் 23, 2024 03:22 PM
ADDED : ஏப் 23, 2024 01:13 PM

சென்னை: நாட்டின் அதிகபட்சமாக ஒடிஷாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவிற்கு (43.9 செல்சியஸ்) அடுத்து ஈரோட்டில் 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
மாநிலம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வருகிறது. தமிழக வட மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடலோரம் மற்றும் மலைப்பகுதி அல்லாத மாவட்டங்களிலும் வெயில் தகிக்கிறது.
இந்நிலையில், நாட்டில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான ஊர்களில் தமிழகத்தின் ஈரோடு 2வது இடத்தை பிடித்துள்ளது. அங்கு 43 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி உள்ளது.
முதல் இடத்தில் ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பா உள்ளன. அங்கு 43.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. வரும் நாட்களில் கடும் வெப்பம் தகிக்கும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
எச்சரிக்கை
இதனிடையே, சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஏப்.27 வரை தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும். இன்றும், நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

