தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வழிப்பறி வழக்கில் 3 பேருக்கு சிறை

வழிப்பறி வழக்கில் 3 பேருக்கு சிறை

வழிப்பறி வழக்கில் 3 பேருக்கு சிறை


UPDATED : நவ 17, 2026 07:17 PM

ADDED : நவ 17, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 07:17 PM ADDED : நவ 17, 2026 07:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடந்து சென்றவரிடம் வழிப்பறி செய்த மூன்று பேருக்கு, நீதிமன்றத்தில் தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருவாரூரைச் சேர்ந்த செந்தில்ராஜ் என்பவர், கடந்த மார்ச் 20ம் தேதி, தஞ்சாவூர், புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடந்து சென்றர். பைக்கில் வந்த மூன்று பேர், செந்தில்ராஜ் முகத்தை பிளேடால் கிழித்து, அவரிடம் இருந்து மொபைல் போனை பறித்து சென்றனர்.

மருத்துவ கல்லுாரி போலீசார், தஞ்சாவூர், மானோஜிப்பட்டியை சேர்ந்த வாசிம்அகமது, 23, அரவிந்த், 20, பசுபதிகோவிலைச் சேர்ந்த சிவக்குமார், 21, ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த, தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரபுராம், குற்றம்சாட்டப்பட்ட வாசிம்அகமது, அரவிந்த், சிவக்குமார் ஆகியோருக்கு, தலா, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us