உடுமலை குளத்தில் 3 பேர் சடலம் மீட்பு; போலீசார் விசாரணை
உடுமலை குளத்தில் 3 பேர் சடலம் மீட்பு; போலீசார் விசாரணை
ADDED : டிச 21, 2024 01:02 PM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை குளத்தில் 16 வயது சிறுமி, 2 வாலிபர்கள் என மூவர் சடலம் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளி மாணவி மற்றும் இரு இளைஞர்கள் குளத்தில் சடலமாக கிடந்தனர். போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் (20) என்பவரிடம் பழகியதாகவும், சிறுமியைப் பார்க்க வந்த ஆகாஷ் மற்றும் சிறுமியின் உறவினர் மாரிமுத்து (20) மூவரும் ஒரே பைக்கில் செல்லும் போது குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
16 வயது மாணவியை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்திருந்த நிலையில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.