ADDED : ஏப் 14, 2025 09:36 PM

கடலுார்: காட்டுமன்னார்கோவில் அருகே வாய்க்காலில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர்.
கடலுார் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே லால்பேட்டை பகுதியில் வாய்க்கால் இருக்கிறது. இன்று விடுமுறை தினம் என்பதால், உபயத்துல்லா(8), முகமது அபில்(10), முகமது பாசிக்(13) ஆகிய மூன்றுபேரும் அங்கிருக்கும் வாய்க்காலில் குளிக்கச் சென்றனர்.
வாய்க்காலில் இழுவை அதிகமாக இருந்ததை அறியாத அந்த சிறுவர்கள், நீரில் மூழ்கினர்.அவ்வழியாக சென்ற சிலர் காப்பாற்ற முயன்றுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, தேடும் பணி நடந்தது. 3 மணிநேர தேடலுக்கு பின் 3 சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். கடலுார் அரசு மருத்துவ மனைக்கு சிறுவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பாதிக்கப்பட்ட உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

