ADDED : செப் 09, 2024 06:06 AM

போடி: தேனி மாவட்டம் தேவாரம் அருகே சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் முடிந்து சிலைகளை கரைத்துவிட்டு திரும்ப மறவப்பட்டி வரும்போது டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் மூன்று சிறுவர்கள் பலியாகினர்.
தேனி மாவட்டம் தேவாரம் மறவப்பட்டி காளியம்மன் கோயில் தெரு ஆறுமுகம் மகன் விஷால் 14. அதேப்பகுதி தமிழன் மகன் நிவாஷ் 15, பிரபு மகன் கிஷோர் 14 உட்பட 8 பேர் விநாயகர் சிலையை மறவபட்டியில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் உள்ள மார்க்கையன்கோட்டை முல்லைப் பெரியாற்றில் ஒரு டிராக்டரில் ஏற்றிச் சென்று கரைத்தனர்.
மீண்டும் டிராக்டரில் மறவபட்டிக்கு திரும்பினர். அப்போது லட்சுமிநாயக்கன்பட்டி முதல் சிந்தலச்சேரி செல்லும் ரோட்டில் வறப்பு பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் விஷால், நிவாஷ், கிஷோர் சம்பவ இடத்தில் பலியாகினர். மீதம் உள்ள வாலிபர்கள் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்ட நிலையில், அனைவரும் உத்தம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோக்க்ப்பட்டு, பின் வீடு திரும்பினர். தேவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.