உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 15, 2026 09:58 PM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக தலைமைச்செயலர் சாய் குமார் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக வாரியம்(TUFIDCO) மேலாண் இயக்குநர் விவேகானந்தன்- தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சிறப்பு செயலர் ஆகவும்
சேலம் பட்டுப்புழு வளர்ப்புத்துறை இயக்குநர் சாந்தி - ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவை திட்ட இயக்குநர்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைத்துறை இயக்குநர் மெர்சி ரம்யா- தமிழ்நாடு எரிசக்தி விநியோக வாரியகழகம் மற்றும் கூடுதல் மேலாண் இயக்குநர் ஆகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
