ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை; 5 தனிப்படைகள் அமைப்பு; திருப்பூரில் பயங்கரம்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை; 5 தனிப்படைகள் அமைப்பு; திருப்பூரில் பயங்கரம்
UPDATED : நவ 29, 2024 03:42 PM
ADDED : நவ 29, 2024 10:13 AM
முழு விபரம்

திருப்பூர்: திருப்பூர் அருகே பொங்கலூர் - சேமலைக்கவுண்டம்பாளையத்தில், விவசாய தம்பதி, மகன் என மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் அருகே பொங்கலூர் - சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி தெய்வசிகாமணி, அலமாத்தாள் வசித்து வந்தனர். மகன் செந்தில்குமார் கோவையில் வசிக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சொந்த ஊர் சென்றவர், நேற்று இரவு பெற்றோருடன் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இன்று (நவ.,29) அடையாளம் தெரியாத நபர்களால் கட்டையால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
![]() |
![]() |
5 தனிப்படைகள் அமைப்பு
இது குறித்து, திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி கூறியதாவது: பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை ஒருவர் செய்திருக்க வாய்ப்பு இல்லை. கொள்ளையடிக்கப்பட்ட நகை குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தோட்டத்தில் வேலை பார்த்தவர்களின் பட்டியலை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறோம். கொலையாளிகளை பிடிக்க வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
திருட்டுக்காகவா...
முன் விரோதமா?
திருப்பூர்
அருகே விவசாய தம்பதியர், அவர்களின் மகன் என மூன்று பேர் வெட்டி கொலை
செய்யப்பட்டதில், கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
வெறும், 6 சவரன் நகைக்காக நடந்த கொலைகளா அல்லது முன்விரோதம் காரணமா என
போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.