உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 17, 2026 09:38 PM
ADDED : அக் 17, 2026 09:36 PM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டையில் குல் முகமது கனி, 62. நவதானிய வியாபாரி. இவரின், பாத்திர கிடங்கின் பூட்டை உடைத்து, 55 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள முன்னோர்கள் பயன்படுத்திய பழங்கால செம்பு பாத்திரங்களைத் திருடிய சக்தி, 20, குமார், 39, மாரியப்பன், 21, ஆகிய மூவரையும், பேட்டை போலீசார் கைது செய்தனர்.
மேலும், 15 கிலோ செம்பு பானை, 2 செம்பு கடாரங்கள், 25 கிலோ செம்பு வெந்நீர் பாய்லர் ஆகியவை திருடப்பட்டதாக அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்
