ADDED : ஜன 09, 2024 02:52 AM
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நேற்று அதிகாலை நடந்த இரண்டு விபத்துகளில் ஒடிசா மாநில தொழிலாளர்கள் இருவர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த லிபக் நாயக் 25, சுசந்தா தாஸ் 43, ஆகியோர் ராஜபாளையம் அருகேயுள்ள நுாற்பாலைகளில் பணிபுரிகின்றனர். 2 பேரும் நண்பர்கள். இருவரும் பணி முடிந்து நேற்று அதிகாலை 1:30 மணிக்கு ஒரே டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) புதுப்பட்டி விலக்கு பகுதி டீக்கடைக்கு வந்துள்ளனர். அங்கு சாலையோரம் நிறுத்தி இருந்த கர்நாடக மாநில லாரி மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டைப்பட்டி தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் 40, சேத்துாரில் இருந்து அதிகாலை 4:30 மணிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்ற போது தென்காசிக்கு சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.