கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
ADDED : மே 06, 2025 08:42 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வீரராகவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், வேத பாராயணம் படிக்க வந்த 3 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நடந்த பிரம்மோற்சவ விழாவில், வேத பாராயணம் படிக்க வந்த 3 பேர் குளத்தில் இறங்கினர். கால் வழுக்கியதில் அடுத்தடுத்து மூவரும் கீழே விழுந்தனர்.
நீரில் மூழ்கிய அவர்கள் மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உதவி செய்ய ஆட்கள் ஓடி வருவதற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டது. போலீசார் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்கள் குன்றத்தூரை சேர்ந்த ஹரிஹரன்,16, அம்பத்தூரை சேர்ந்த வெங்கட்ராமன், 17, தென்காசியை சேர்ந்த வீரராகவன், 24, என அடையாளம் காணப்பட்டுள்ளனர். வேத பாராயணம் செய்ய வந்த மூவர் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

