மதுரை ரயில் நிலையத்தில் 30 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: சென்னையை சேர்ந்தவர் கைது
மதுரை ரயில் நிலையத்தில் 30 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: சென்னையை சேர்ந்தவர் கைது
ADDED : மார் 01, 2024 11:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து செங்கோட்டை வரும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் பயணி ஒருவர் மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. அவரிடம் இருந்து 30 கிலோ அளவிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது பல கோடி மதிப்பை பெறும் எனக் கூறப்படுகிறது.

