தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/30 சவரன் கொள்ளை 2 வாலிபர்கள் கைது

30 சவரன் கொள்ளை 2 வாலிபர்கள் கைது

30 சவரன் கொள்ளை 2 வாலிபர்கள் கைது


UPDATED : அக் 21, 2026 10:38 PM

ADDED : அக் 21, 2026 09:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 10:38 PM ADDED : அக் 21, 2026 09:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே, 30 சவரன் நகைளை கொள்ளையடித்த வழக்கில், வில்லியம் பென்டிக், 19, விக்னேஷ், 24, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கொரட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செந்தில்குமார், 45. இவர், அக்., 1ம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு, வயலுக்கு சென்றார். பகல், 11:30 மணியளவில் வீட்டிற்கு திரும்பிய போது, வீடு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, 30 சவரன் நகைகள் மாயமாகி இருந்தன. திருநாவலுார் போலீசில் செந்தில்குமார் அளித்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

அதில், அதே பகுதியை சேர்ந்த வில்லியம் பென்டிக், உளுந்துார்பேட்டை அடுத்த டி.குன்னத்துாரை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர், செந்தில்குமார் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து, கொரட்டூர் அருகே இருந்த இருவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us