தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/3,000 ஆண்டுகள் பழமையான ஈம சின்னங்கள் கண்டெடுப்பு

3,000 ஆண்டுகள் பழமையான ஈம சின்னங்கள் கண்டெடுப்பு

3,000 ஆண்டுகள் பழமையான ஈம சின்னங்கள் கண்டெடுப்பு


UPDATED : நவ 23, 2026 10:00 PM

ADDED : நவ 23, 2026 10:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 10:00 PM ADDED : நவ 23, 2026 10:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே, 3,000 ஆண்டுகள் பழமையான ஈம சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ் நந்தியம்பாடி அருகே, 50க்கும் மேற்பட்ட ஈம சின்னங்கள் இருப்பதை வரலாற்று ஆய்வாளர் செல்வகுமார் கண்டெடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நந்தியம்பாடிக்குட்பட்ட பகுதியான, கீழ் நந்தியம்பாடி – மேல்பாதி சாலையில் காட்டு பகுதிகளை ஆய்வ செய்ததில், 50க்கும் மேற்பட்ட ஈம சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டது. இவை, கல் வட்டங்கள் போல், பெரிய கற்களால் வட்ட வடிவ அமைப்பில் செங்குத்தாக நிறுத்தப்பட்டு நடுப்பகுதி காலியாக உள்ளது. ஒரு வட்டச்சுற்றில், 7 முதல், 9 கற்கள் வரை நிறுத்தப்பட்டுள்ளது. சில கல் வட்டங்களின் கற்கள் ஆங்காங்கே சிதறியும் காணப்படுகிறது. 150 செ.மீ, அளவில் வட்ட சுற்றுளவு உள்ளது. சில இடங்களில் புதை குழிகள் போன்ற அமைப்பு அடையாளத்துடன் காணப்படுகிறது.

இவ்வகையான கல்வெட்டுகள், 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெரும் கற்காலத்தை சேர்ந்தவையாகும். இதுவரை அறியப்படதாக நிலையில், 15 ஏக்கர் நிலப்பரப்பில் ஈமச்சின்னங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us