ADDED : ஜூலை 31, 2024 04:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வயநாட்டில் சூரமலை மற்றும் முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 31 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள், அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் எனக்கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினர் தகவல் சேகரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து 45 நிவாரண முகாம்களில் பதிவான விவரங்களை வைத்து தகவல் சேகரிக்கப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 8 தமிழர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.