ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பின் 32வது நினைவு தினம்: எல்.முருகன் அஞ்சலி
ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பின் 32வது நினைவு தினம்: எல்.முருகன் அஞ்சலி
ADDED : ஆக 08, 2024 02:25 PM

சென்னை: 1993ம் ஆண்டு சென்னையில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பு நிகழ்வின் 32வது நினைவு தினம் இன்று (ஆக.,8) அனுசரிக்கப்படுகிறது. பயங்கரவாத தாக்குதலுக்கு பலியான, ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களுக்கு அஞ்சலியை செலுத்துவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
1993ம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் 32ம் ஆண்டு நினைவு தினம் சென்னையில் உள்ள அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வு தொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டதாவது: இஸ்லாமிய பயங்கரவாதத்தால் சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில், அன்று இதே நாளில் பலியான தேசபக்தர்களுக்கு சிரத்தாஞ்சலி செலுத்துகிறோம்.
கடந்த 1993ம் ஆண்டில், சென்னையிலுள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது பயங்கரவாத அமைப்பினர் நிகழ்த்திய தாக்குதலுக்கு, எந்தவிதமான காரணமும் அறியாமல் 11 ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் தங்களது இன்னுயிரை இழந்த தினம் இன்று. தேசம், தெய்வீகம், சமுதாயம் என்று வாழ்ந்து, இத்தகைய பயங்கரவாத தாக்குதலுக்கு பலியான, ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். ஓம் சாந்தி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.