sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

"ஹாண்ட் பால்' போட்டி:தமிழக அணிக்கு தங்கம்

/

"ஹாண்ட் பால்' போட்டி:தமிழக அணிக்கு தங்கம்

"ஹாண்ட் பால்' போட்டி:தமிழக அணிக்கு தங்கம்

"ஹாண்ட் பால்' போட்டி:தமிழக அணிக்கு தங்கம்


ADDED : அக் 02, 2011 12:59 AM

Google News

ADDED : அக் 02, 2011 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தேசிய அளவிலான, 'ஹாண்ட் பால்' போட்டியில், முதல் முறையாக தமிழக ஜூனியர் மகளிர் அணி, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

தேசிய, 'ஹாண்ட் பால்' கூட்டமைப்பு சார்பில், இந்தாண்டு ஜூனியர் மகளிருக்கான தேசிய, 'ஹாண்ட் பால்' போட்டி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது.

போட்டியை, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் விஜயகுமார் துவக்கி வைத்தார். தேசியளவில் நடந்த இப்போட்டியில், பஞ்சாப், ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட 24 மாநிலங்களிலிருந்து 24 அணிகள் கலந்து கொண்டன. 16 பேரைக் கொண்ட இந்த அணியில், அடுத்தடுத்த போட்டிகளுக்குப் பின், தமிழகம் மற்றும் பஞ்சாப் அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.



இதில், தமிழக அணி 18 -10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வென்றது. தமிழக ஜூனியர் மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வெல்வது, இதுவே முதல் முறை. அதேபோல், மினி பாய்ஸ் பிரிவு ஹாண்ட் பால் போட்டியில், 23 மாநிலங்களில் இருந்து, 23 அணிகள் கலந்து கொண்டன. பத்து பேர் கொண்ட இந்த அணியில், பலகட்ட போட்டிகளுக்குப் பின், தமிழகம் - டில்லி அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இதில், தமிழக அணி 15 - 17 என்ற கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டது. இப்போட்டியில், டில்லி அணிக்கு தங்கப் பதக்கமும், தமிழகத்துக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர் சாந்தி கபூர், வெற்றி பெற்ற தமிழக ஹாண்ட் பால் அணிக்கும், மினி பாய்ஸ் அணிக்கும், கோப்பைகளை வழங்கிச் சிறப்பித்தார்.இது குறித்து, தமிழக ஹாண்ட் பால் சங்கச் செயலர் சரவணன் கூறும் போது, 'தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் தமிழக அணிக்கு, மாநில அரசு சார்பில் ஐந்து லட்ச ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதைப் பெறும் முதல் அணியாக, எங்கள் அணி தகுதி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.








      Dinamalar
      Follow us