ADDED : அக் 03, 2011 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்:ஓட்டுச் சாவடிகளில் 'அடையாளம் காட்டும் அலுவலர்' ஒருவரை நியமிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் 'அடையாளம் காட்டும் அலுவலர்' களாக வி.ஏ.ஓ., க்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஓட்டுச் சாவடியில் வசதிகள் செய்து கொடுத்தல், கூட்டத்தை முறைப்படுத்தல், ஓட்டுப் போடுவதில் பிரச்னை ஏற்பட்டால் தீர்த்து வைப்பது போன்ற பணிகளை செய்தனர்.உள்ளாட்சி தேர்தலில், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஓட்டுச் சாவடிகளில் வசதிகள் ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஓட்டுச் சாவடிகளுக்கு சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., க்களை 'அடையாளம் காட்டும் அலுவலராக நியமிக்க' தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கிராம உதவியாளர்களையும் இதற்கு பயன்படுத்தலாம். ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும் இவர்கள் கண்காணித்து தகவல் தர வேண்டும்.

