sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

"கலெக்டர்கள் கட்டுப்பாட்டில் ஊராட்சி தலைவர்கள்'

/

"கலெக்டர்கள் கட்டுப்பாட்டில் ஊராட்சி தலைவர்கள்'

"கலெக்டர்கள் கட்டுப்பாட்டில் ஊராட்சி தலைவர்கள்'

"கலெக்டர்கள் கட்டுப்பாட்டில் ஊராட்சி தலைவர்கள்'


ADDED : அக் 12, 2011 10:54 PM

Google News

ADDED : அக் 12, 2011 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ''ஊராட்சி தலைவரை, சுதந்திரமாக செயல்படவிடாமல், தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கலெக்டர்கள் வைத்துள்ளனர்,'' என, திரிபுரா முன்னாள் தலைமைச் செயலர் ராகவன் பேசினார்.

எழுத்தாளர் சாவித்திரி கண்ணன் எழுதிய, 'உள்ளாட்சித் தேர்தல் அரசியலும் அதிகாரமும்' என்ற புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.

விழாவில், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில், இந்த புத்தகம் வெளிவந்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. தன்னிச்சையாக செயல்படும் வகையில், மாநில தேர்தல் கமிஷனுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் நடுநிலையாக செயல்பட, போலீசுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வகித்தவர்கள் தான் எம்.எல்.ஏ., எம்.பி., பதவிக்கு வர வேண்டும் என்ற கருத்து, முன் பேசப்பட்டது. பின், பல்வேறு காரணங்களுக்காக அது கைவிடப்பட்டது. இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

திரிபுரா முன்னாள் தலைமைச் செயலர் ராகவன் பேசியதாவது: மாநில அரசு மூலமாக உரிய தேவைகளுக்கான நிதியுதவி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைப்பதில்லை. ஊராட்சி தலைவரை சுதந்திரமாக செயல்பட விடாமல், கலெக்டர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். பிரிட்டிஷ்காரர்கள் மனோபாவத்துடன் அதிகாரிகள் செயல்படுகின்றனர். இந்நிலை மாற வேண்டும். இவ்வாறு ராகவன் பேசினார்.








      Dinamalar
      Follow us