ADDED : டிச 20, 2024 12:26 AM
சென்னை:ஊரக வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
ஊரகப் பகுதிகளில், சாலைகள், உயர்மட்ட பாலங்கள், தெரு விளக்குகள், குடிநீர் வழங்குதல், சுகாதாரம் போன்றவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள், அங்கன்வாடிகள், ஊரக சந்தைகள், உணவு கிடங்குகள் போன்றவற்றையும், அரசு ஏற்படுத்தி வருகிறது.
'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள், வெள்ளம் பாதித்த பகுதிகள் மற்றும் இணைப்பு வசதி இல்லாத உள்ளாட்சி பகுதிகளில், 34 உயர்மட்ட பாலங்கள் முன்னுரிமை அடிப்படையில் கட்டப்பட உள்ளன. 18 மாவட்டங்களில், 177.8 கோடி ரூபாய் செலவில், இவை கட்டப்பட உள்ளன.
இப்பட்டியலில், கோவை, கடலுார், திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சேலம், நீலகிரி, திருப்பூர், தஞ்சாவூர், துாத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, வேலுார், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.