ADDED : செப் 28, 2011 09:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : '3ஜி' ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதில், முறைகேடு ஏதும் நடந்ததா என்பது பற்றி மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மூன்று தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு, '3ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கியதில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர் யாகேஷ் ஆனந்த், பொது நல மனு ஒன்றை டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் சஞ்சய் கண்ணா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக, மத்திய அரசின் நிலை என்ன? என்பது குறித்து, நவம்பர் 30ம் தேதி பதிலளிக்கும்படி கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.எஸ்.சந்திகோக்கிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.