"ஓசி' ரேஷன் கார்டு பறிமுதல் அரிசி கடத்தலுக்கு "செக்'
"ஓசி' ரேஷன் கார்டு பறிமுதல் அரிசி கடத்தலுக்கு "செக்'
ADDED : ஆக 29, 2011 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : அரிசி கடத்தலை தடுக்க, 'ஓசி' ரேஷன் கார்டு கொண்டு வருவோரை கண்டறிந்து, பறிமுதல் செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடையில் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. அவற்றை கடத்துவதை தடுக்க, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. கடத்தல் தடுப்பு முறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் ரேஷன் கடைகளில் அரிசி வினியோகத்தை முறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, ஒருவர் பல கார்டுகளை கொண்டு வந்து, அரிசி வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவர், அவரது கார்டுக்கு மட்டுமே அரிசி வாங்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கார்டு கொண்டு வந்தால், பறிமுதல் செய்யவும்; நபர் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.