"தேர்தலுக்காக தமிழக அரசு மீது பழி போட வேண்டாம்": அமைச்சர் ரகுபதி பேட்டி
"தேர்தலுக்காக தமிழக அரசு மீது பழி போட வேண்டாம்": அமைச்சர் ரகுபதி பேட்டி
ADDED : மார் 05, 2024 05:34 PM

நாகர்கோவில்: 'தேர்தலுக்காக தமிழக அரசு மீது மத்திய அரசு பழி போட வேண்டாம்' என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப்பொருள் வழக்குகளில் 80 சதவீதத்திற்கு அதிகமானவர்களுக்கு தண்டனையை தி.மு.க அரசு பெற்று தந்துள்ளது. தேர்தலுக்காக மதுரை எய்மஸ் மருத்துவமனை பணி துவங்கியுள்ளது. தேர்தலுக்கு பின் பணி நின்றுவிடும். 2022ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2,016 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குஜராத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகம் உள்ளது என அனைவருக்கும் தெரியும். அமைதிப் பூங்காவான தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி பலன் அளிக்காது. தேர்தலுக்காக தமிழக அரசு மீது மத்திய அரசு பழி போட வேண்டாம். குஜராத்தில் ரூ.26,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருட்கள் எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் என்பதால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 16 பேரை பா.ஜ., தனது கட்சியில் இணைத்து கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

